நடிகை விசாகா சிங் திருமணம்? வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தம்பதி!!!


18th of November 2014
சென்னை:ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும் பிரபல நடிகருமான நர ரோஹித் நடிக்கும் 'ரவுடி ஃபெல்லோ' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த படத்தில் ரோஹித்துக்கு ஜோடியாக 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' நாயகி விசாகாசிங் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு திருமண காட்சி ஒன்று அமெரிக்காவில் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு அமெரிக்க தம்பதி இந்த திருமணத்தை உண்மையான திருமணம் என நினைத்து விசாகா சிங்கிற்கு வாழ்த்து கூறினார்களாம். விசாகா சிங்கும் படப்பிடிப்பு என்ற உண்மையை கூறாமல் உண்மையான திருமணம் போலவே அந்த தம்பதிகளிடம் ஆசி வாங்கிக்கொண்டார். பின்னர் மணமக்களை கட்டிப்பிடித்து வாழ்த்திய அமெரிக்க தம்பதிகள் இருவரையும் வாழ்த்தி விட்டு சென்றுள்ளனர்.

இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த படக்குழுவினர்களுக்கு ஒரே அதிர்ச்சி. அமெரிக்க தம்பதிகள் வாழ்த்து தெரிவித்த காட்சியையும் கேமராமேன் படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காட்சி படத்தில் இடம்பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments