சென்னை பாக்ஸ் ஆபிஸ் - சென்னையில் வேலையில்லா பட்டதாரியின் வசூலை முந்திய கத்தி!!!

11th of November 2014சென்னை
 5. நெருங்கி வா முத்தமிடாதே

லட்சுமி ராமகிருஷ்ணனின் நெருங்கி வா முத்தமிடாதே சென்ற வார இறுதியில் இருபத்தி நான்காயிரம் அளவுக்கே சென்னை சிட்டியில் வசூல் செய்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை மாநகர வசூல் 4.5 லட்சங்கள். மிக மோசமான வசூல். 
4. பூஜை

சென்ற வார இறுதியில் இப்படம் 9.07 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் 2.25 கோடிகளை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. சுமாரான வNல்
 
3. ஜெய்ஹிந்த் 2

அர்ஜுன் நடிப்பில் சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 17 லட்சங்களை வசூலித்துள்ளது. அர்ஜுன் படத்துக்கு இது சுமாரான ஓபனிங் என்றே சொல்ல வேண்டும்.
 
2. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

விமலுக்கு ஒரு மார்க்கெட் இருக்கதான் செய்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களைத் தாண்டி 27.4 லட்சங்களை வசூலித்துள்ளது. பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான வசூலே.
 
1. கத்தி

முதலிடத்தை இந்த வாரமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது கத்தி. சென்ற வார இறுதியில் இதன் சென்னை வசூல் 69.4 லட்சங்கள். நேற்றுவரை சென்னை சிட்டியில் இதன் வசூல் 6.7 கோடிகள். இதன் மூலம் இந்த வருடம் சென்னையில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை வேலையில்லா பட்டதாரியிடமிருந்து கத்தி பறித்துள்ளது.
 

Comments