3rd of November 2014
சென்னை:ராணாவை காதலிக்கவில்லை டேட்டிங்கும் செய்யவில்லை என்றார் ராகினி திவேதி.நடிகர் ராணா, நடிகை திரிஷா நெருங்கிய நட்புடன் பழகி வந்தனர். சினிமா சம்பந்தப்பட்ட பார்ட்டிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பரபரப்பாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இருவருக்கும் இடையே தற்போது மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். வேறு நடிகைகளுடன் ராணா தொடர்பில் இருப்பதால் அவரை விட்டு திரிஷா பிரிந்ததாக தெரிகிறது. இந்த பிரிவுக்கு நடிகை ராகினி திவேதிதான் காரணம் என்று சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அடிக்கடி ராகினி மும்பைக்கும், ஐதராபாத்துக்கும் சென்று ராணாவை சந்திப்பதாகவும் அவருடன் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்து கொதிப்படைந்தார் திரிஷா.
இதனால் ஷாக் ஆன ராகினி தனது இணைய தள பக்கத்தில்,‘நானும் ராணாவும் நல்ல நண்பர்கள் அவ்வளவுதான். மற்றபடி கிசுகிசுக்களில் கூறப்படுவதுபோல் அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை, அவருடன் டேட்டிங் செய்யவில்லை. இதுபோல் சிறுபிள்ளைத்தனமாக கூறுவதை எல்லோரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் ராணாவும், ராகினியுடன் இணைத்து வரும் தகவலுக்கு கோபத்தை வெளியிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment