18th of November 2014
சென்னை:பிரஷாந்த் நடிப்பில், அவருடைய அப்பாவும் பிரபல நடிகருமான தியாகராஜன்,
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘சாஹசம்’.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், இப்படத்திற்கு இசையமைக்கும் தமனின் பிறந்தநாளை, தியாகராஜன், பிரசாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் மிகப் பெரிய அளவில் சமீபத்தில் கொண்டாடினார்கள்.
சாஹசம் படத்தில் அனைத்துப் பாடல்களையும் தமன், மிகச் சிறப்பாக இசையமைத்துக் கொடுத்துள்ளாராம். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டாவதுடன், படத்திற்கும் பலம் சேர்க்கும் வகையில் உள்ளதால், தியாகராஜன் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாராம். இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடகத்தான், தமனுக்கு பிறந்தநாள் பரிசாக டோயோட்டோ ஃபார்ச்சூனர் கார் ஒன்றை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் தமன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை சாஹசம் குழுவினருடன் சேர்ந்து கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், தயாரிப்பாளர்கள் எல்.எம்.எம் முரளி, ஜே.எஸ்ச.சதீஷ், டி.சிவா, ஒளிப்பதிவாளர்கள் செளந்தர், பப்பு, இயக்குநர் மதி, கலை இயக்குநர் மிலன், பின்னணி பாடகிகள் திவ்யதர்ஷினி, ரீதா, மானஷி,, மேஹா, ரனிலா ரெட்டி, சுஜித்ரா, மோனிஷா, பாடகர்கள் விஜய் பிரகாஷ், ரஞ்சித், ஆலப் ராஜ், ராகுல் நம்பியார் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

Comments
Post a Comment