தனுஷ், காஜலை ஜோடி சேர்த்த ராதிகா!!!



6th of November 2014
சென்னை:காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி மோகன் அடுத்ததாக துல்கர் சல்மான், நஸ்ரியாவை வைத்து ‘வாய் மூடி பேசவும்’ என்ற படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கினார். படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் தனுஷ் பட வாய்ப்பு தானாகவே தேடிவந்தது.
 
இரண்டாவது படத்தில் மலையாள மெகாஸ்டாரின் மகனை இயக்கும் வாய்ப்பை பெற்ற பாலாஜிமோகனுக்கு மூன்றாவது படத்தில் இந்திய சூப்பர்ஸ்டாரின் மருமகனை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை ஜாக்பாட் என்றுதான் சொல்லவேண்டும்.

ராதிகா மற்றும் சரத்குமார் இனைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏற்கனவே
‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை இழந்த காஜல் இப்போது தனுஷுடன் இந்தப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Comments