மீண்டும் ரஜினி படத்தை கைப்பற்றியது ஈராஸ்!!!

12th of November 2014
சென்னை:மிக பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிக்கும் திரைப்பட நிறுவனம் தான் ஈராஸ் இன்டர்நேஷனல்.. ரஜினி நடித்து சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம் தான். தற்போது இந்த நிறுவனம் தான் ரஜினி நடித்துவரும் லிங்கா’ படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது..

ரஜினியுடன் அனுஷ்கா, சோனாக்ஷி, சந்தானம் நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கிவரும் இந்தப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஈராஸ் நிறுவனம் தங்களது கிரியேட்டிவ் டைரக்டர் ஆக ரஜினியின் மகள் சௌந்தர்யாவைத்தான் நியமித்திருக்கிறது. அதனால் தனது தந்தையின் படம் தனது நிறுவனத்தைவிட்டு கைநழுவிப்போக விடுவாரா சௌந்தர்யா.?.

Comments