முருகதாஸ் சொல்லும் புதுக்கணக்கு!!!

17th of November 2014
சென்னை:ராமாயணத்தில் ராமபிரான், தனக்கு படகு ஓட்டி உதவி செய்த குகனைப்பற்றி சொல்லும்போது, “குகனோடு ஐவரானோம்” என்று சொல்லியிருப்பார். அதேபோல நேற்று முன் தினம நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்துள்ள ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாசும் புதுக்கணக்கு ஒன்றை சொல்லியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியிள் ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது” எஸ்.ஜே.சூர்யா சாரைப் பற்றிப் பேசும்போது சீரியல் அளவுக்குப் பேசமுடியும். 17 ஆண்டுகால நட்பு எங்களுடையது. ’குஷி’ படத்தில் அவருடனும் விஜய் சாருடனும்வேலை பார்த்ததைக் கணக்கு பார்த்தால் ’கத்தி’ எனக்கு  விஜய் சாருடன் மூன்றாவது  படம்” என்றார். அட இதுவும் புதுசா இருக்கே..

Comments