சொதப்பலான படங்களில் நடித்து முட்டாளாக மாட்டேன்: இலியானா!!!

13th of November 2014
சென்னை:சொதப்பலான படங்களை ஒப்புக்கொண்டு என்னை நானே முட்டாள் ஆக்கிக்கொள்ள விரும்பவில்லை' என்றார் இலியானா.இது பற்றி அவர் கூறியது:என்னுடைய 18வது வயதில் நடிக்க வந்தேன். இப்போது 28 வயது ஆகிறது. சினிமாவில் இது நீண்ட பயணம்.
 
இனி படங்களில் நடிப்பதை பொறுமையுடன் தேர்வு செய்ய விரும்புகிறேன். சொதப்பலான படங்களில் நடித்து முட்டாளாக மாட்டேன். ஒவ்வொரு படம் தேர்வு செய்யும்போதும் அதில் ஒரு ஸ்பெஷல் இருக்க வேண்டும். இப்போது நடிக்கும் ஒரு படம் பின்னாளில் பார்க்கும்போது என்னை கடுப்பேற்றுவதாக இருக்கக்கூடாது. இதயபூர்வமாக அது ரசிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

அதனால்தான் இப்போது குறைந்த அளவிலான படங்களை ஒப்புக்கொள்கிறேன். தென்னிந்திய மொழியில் 16 படங்கள் நடித்திருக்கிறேன். அந்த அனுபவம்தான் என்னை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது. இந்தியிலும் இதே பாணியில்தான் படங்களை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு இலியானா கூறினார்.

Comments