சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்லும் ஜி.வி.பிரகாஷ்!!!

14th of November 2014
சென்னை:இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது தயாரிப்பாளர், நடிகர் என்று பரிணாமன் எடுத்துள்ளார். அவர் நாயகனாக நடிக்கும் ‘பென்சில்’ படம் விரைவில் வெளியாக இருக்க, மேலும் சில படங்களி நாயகனாக ஒப்பந்தமாகி ஜி.வி, நடித்து வருகிறார்.

இதற்கிடையில், இனி ஜி.வி.பிரகாஷ்குமார், இனி நடிப்புக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார், இசைக்கு அல்ல, என்று திரையுலகில் கூறிவரும் நிலையில், தற்போது சிம்பொனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமார் விரைவில் ஜெர்மனி நாட்டுக்கு செல்ல இருக்கிறார்.


இது குறித்து கூறிய ஜி.வி.பிரகாஷ்குமார், “சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர் பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளேன். உலக அரங்கில் பிரபலமாக விளங்கும் சில இசை அமைப்பாளர்களுடன்  என்னை ஒப்பிட்டு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தமைக்கு இறைவனக்கு நன்றி. ஜெர்மனியில் உள்ள ’ஸ்டூட்கார்ட்’ (Stuttgart)  என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசை பதிவுக்காக நான் விரைவில் ஜெர்மனி செல்ல உள்ளேன். இசை உலகில் பிரசித்தி பெற்ற பெயர்கள் பல ஜெர்மனியில் தோ

 
ன்றி உள்ளது. இதில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை  காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை.” என்றார்.

Comments