17th of November 2014
சென்னை:இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஸ்கின் இயக்கிவரும் படம் ‘பிசாசு’. இந்தப்படத்தில் கதாநாயகனாக நாகா நடிக்க, நாயகியாக.. இல்லையில்லை பிசாசாக நடித்திருக்கிறார் பிரயாகா. இவரை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் மிஸ்கின். அதுமட்டுமல்ல, இந்தப்படத்திற்காக நூறு பேரை பார்த்து அதில் தேர்வான ஒருத்தர்தான் பிரயாகா.
நேற்று முன் தினம் ‘பிசாசு’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு நடந்தது இதில் பாலா, மிஸ்கின் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டார்கள். மிஸ்கின் பேசும்போது, “இந்தப்படத்தில் பிரயாகாவின் ஒத்துழைப்பு அருமையானது. படத்தில் அவரின் உண்மையான முகம் வருவது கொஞ்ச நேரம் தான். பெரும்பாலான நேரங்களில் அவர் பிசாசாகத்தான் வருகிறார்.
பல காட்சிகளில் அவரை அறுபது, எழுபதடி உயரத்தில் கிரேனில் கட்டி அந்தரத்தில் தூக்குவோம்.. அதை பார்த்து அவரது அப்பா அம்மா கதறி அழுவார்கள். ஆனால் நான் அவர்கள் பக்கம் திரும்பினால் எங்கே, என் மனது இளகிவிடுமோ என்று அவர்கள் பக்கமே திரும்பமாட்டேன்.. இந்தப்படத்திற்குப்பின் பிரயாகாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது” என குறிப்பிட்டார்.
Comments
Post a Comment