மூன்று பெரிய படங்கள் வெளியாகும் நாள்!!!

19th of November 2014
சென்னை:ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் லிங்கா , ஐ , என்னை அறிந்தால் ஆகிய மூன்று படங்கள் எப்போது ரிலீசாகும் என்பதுதான், ஐ தீபாவளிக்கு ரிலிசாகும் என எதிர்பார்த்தோம் , ஆனால் ஐ மற்ற மொழிகளிலும் ரிலிசாவதால் தாமதமாகிறது.
 
என்னை அறிந்தால் படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்த்தோம், ஆனால் அப்படத்தின் படபிடிப்பே இன்னும் முடிய வில்லை.

ரஜினியின் லிங்கா – நீண்ட நாள் கழித்து ரஜினியை திரையில் பார்க்கா ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றனர் .
இந்த நிலையில் தற்போது இந்த மூன்று படங்களும் ரிலீசாகும் தேதி குறித்து ஒரு தகல்வல் வெளியாகியுள்ளது , சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா டிசம்பர் 12 ஆம் தேதியும் ,
 
 சியான் விக்ரமின் ஐ டிசம்பர் 25 ஆம் தேதியும் , அஜித்தின் என்னை அறிந்தால் படம் வரும் ஜனவரி 8 ஆம் தேதியும், வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

Comments