ராகுலை சந்தித்த நடிகை குஷ்பு!!!

28th of November 2014
சென்னை:காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பூ காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை குஷ்பு (44) நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
 
இந்த நிலையில் இன்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பூங்கொத்து அளித்தார்.

Comments