12th of November 2014
சென்னை:ராஜ் டி வி இயக்குனர் எம்.ரவீந்திரன், ஆர்.விஜயலட்சுமி ஆகியோரின் மகள் ஆர். மணிப்ரியாவிற்கும் டாக்டர் கே வேலுசுவாமி டாக்டர் சந்திரலேகா ஆகியோரின் மகன் வி.அருண் முத்துவேலுவுக்கும் இன்று காலை எழும்பூரில் அமைந்துள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.இந்த திருமணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல

லிதா மணமக்களை வாழ்த்தி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த வாழ்த்துக் கடிதத்தில், 'மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் உள்ளன்போடு ‘இல்லறமல்லது நல்லறமன்று' என்னும் இன் மொழி வழியில் இல்லற வாழ்வில் இனியவை அனைத்தையும் பெற்று இனிதே வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
இந்த திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, மாதவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, லி மெரிடியன் ஓட்டல் அதிபர் பழனி பெரியசாமி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வெங்கடாசலம்,

நடிகை சரோஜாதேவி நடிகர் செந்தில், ஏ.வி.எம். சரவணன், எம்.எஸ். குகன், அபிராமி ராமநாதன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமண விழாவிற்கு வந்தவர்களை ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன் மற்றும் எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன் எம்.ரகுநாதன் சித்ரா லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர்.
Comments
Post a Comment