23rd of November 2014
சென்னை:தனுஷ் இந்தியில் நடிக்க காரணமாக இருந்தவர்
ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய். தனுஷை இயக்குவதற்கு முன் இவர் மாதவனை
வைத்து எடுத்தப் படம் தனு வெட்ஸ் மனு. படம் ஹிட்.
இப்போது தனு வெட்ஸ் மனுவின் இரண்டாவது பாகத்தை அதே மாதவன், கங்கனா ரனவத்தை
வைத்து எடுக்கிறார். டெல்லியில் நடந்த படப்பிடிப்பின் போது தனுஷும் அதில்
கலந்து கொண்டார். மாதவன் தனுஷ் இருவரும் இடம்பெறும் புகைப்படத்தை மாதவன்
வெளியிட்டுள்ளார். இது படம் சம்பந்தப்பட்டதில்லை. சும்மா ஜாலிக்கு
எடுத்துக் கொண்டது.
இந்தப் படத்தில் தனுஷ் ஒரு காட்சியில் தோன்றுவார், குறைந்தபட்சம் ஒரு பாடல் காட்சியிலாவது வருவார் என முன்பு கூறப்பட்டது.
நடக்கிற விஷயங்களைப் பார்த்தால் தனுஷும் கௌரவ வேடத்தில் நடிப்பார் போல்தான் உள்ளது.
Comments
Post a Comment