இயக்குனர்கள் மீது சமந்தா பாய்ச்சல்!!!

14th of November 2014
சென்னை:சமீபகாலமாக நடிகர், நடிகைகள் வெளிப்படையாக கருத்துக்கள் சொல்லி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. ஸ்ருதி, சமந்தா இந்த விஷயத்தில் போட்டியில் உள்ளனர்.
 
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை என்று ஸ்ருதி அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அப்படி நான் சொல்லவே இல்லையே என்று பின்வாங்கினார். அதுபோல் மகேஷ்பாபு படத்தில் ஹீரோயின் ஒருவர் மண்டியிட்டு அவர் பின்னால் செல்வதை விமர்சித்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்

சமந்தா. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் பேசிய சமந்தா,‘படம் ஓடாவிட்டால் அதில் நடித்தவர்களை குறை சொல்லக்கூடாது. அந்த கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்த தயாரிப்பாளர் மீதுதான் தவறு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்' என்றார்.
 
இவரது பேச்சு தயாரிப்பாளர்களை கோபப்படுத்தி உள்ளது. சமீபத்தில் மகேஷ்பாபு-சமந்தா இணைந்து நடித்த ஒரு படம் தோல்வி அடைந்ததையடுத்து அப்பட தயாரிப்பாளர் மகேஷ்பாபுவிடம் நஷ்ட ஈடு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை மனதில் வைத்தே சமந்தா இப்படி பேசியிருப்பதாகவும் மகேஷ்பாபு படத்தில் வாய்ப்பு பிடிக்க அவர் இப்படி கருத்து சொல்லிய¤ருப்பதாகவும் டோலிவுட்டில் கூறப்படுகிறது.

Comments