21st of November 2014
சென்னை:ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபல் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.
புதுமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் இப்படட்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை தாமரை, மதன் கார்கி ஆகியோர் எழுதியுள்ளனர்.
படம் குறித்து கூறிய இயக்குநர் லக்ஷ்மன், “படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றுகிறது. ஜெயம்ரவி – ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் அங்கே அதிக பொருட்ச் செலவில் படமாக்கப் படுகிறது.
படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ’ரோமியோ ஜூலியட்’ உருவாகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மாதிரியான காமெடி இதில் இருக்கும். இமான் இசை இப்போது எல்லா படங்களிலும் பக்கபலமா இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு பாலிவுட் படத்தின் கதவு திறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.” என்றார்.

Comments
Post a Comment