ஆஸ்கர் லைப்ரேரியில் இடம்பிடித்த ‘ஹேப்பி நியூ இயர்’!!!

18th of November 2014
சென்னை:ஃபராகான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மெய்ன் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’ படங்களுக்குப் பிறகு, ஃபராகான் தன் நண்பர் ஷாரூக்கானை மறுபடியும் இயக்கியிருக்கிறார்.

கவுரி கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுல்லாம் இந்தப்படம். உலகம் முழுவதும் 5000க்கும் அதிகமான அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டன.
 
இதுவரை உலகமெங்கும் சுமார் 350 கோடி ரூபாய் வசூலித்து பிரமாண்டம் காட்டியுள்ள இந்தப்படம், தற்போது ஆஸ்கர் லைப்ரேரியில் இடம்பிடித்துள்ளது. Library of the Academy of Motion Picture Arts & Sciences அதிகாரப்பூர்வமாக இந்தப்படத்தின் திரைக்கதையை தனது நிரந்தர சேமிப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

Comments