விஜயுடன் நடனம் ஆடிய ஸ்ரீதேவி!!!

15th of November 2014
சென்னை:கத்தி’ பட வெற்றியை தொடர்ந்து விஜய், தனது அடுத்தப் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். சிம்புதேவன் இயக்கும் இப்படட்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் நாயகிகளாக நடிக்க, முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவியும் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு நாயகியாக பிரபலமான ஸ்ரீதேவி, 80 களில் தமிழ் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்த அவர், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு மும்பையிலேயே செட்டில் ஆனா, அவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.


சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ்ப் படம் இது தான். சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில், தற்போது ஸ்ரீதேவி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய், ஸ்ரீதேவி நடன காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments