சுந்தர்.சி யுடன் மீண்டும் இணையும் சந்தானம்!!!

10th of November 2014
சென்னை:அரண்மனை’ படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கி வரும் படம் ‘ஆம்பள’. இதில் விஷால் நாயகனாகவும், ஹன்சிகா மோத்மானி, மதுரிமா மற்றும் மாதவி ரவி ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.
 
இப்படத்தில் காமெடி வேடத்தில் சதீஷ் நடித்து வருகிறார். இவர் நடிப்பதால் சந்தானம் இப்படத்தில் நடிக்க வில்லை என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது சந்தானமும் இப்படத்தில் நடிக்கிறார். ஆம்பள படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் சந்தானம் கடைசியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு படத்தில் இருந்து சந்தானம் தொடர்ந்து நடித்திருக்கிறார். தற்போது ஆம்பள படத்திலும் சந்தானம் நடிக்கவுள்ளார் என்று சுந்தர்.சி கூறியுள்ளார். இப்படத்தை பொங்கலன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Comments