எஸ்.ஜே.சூர்யா எப்போதோ இசையமைப்பாளர் ஆகியிருக்க வேண்டியது: ‘இசை’ விழாவில் விஜய் பாராட்டு!!!

17th of November 2014
சென்னை:இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி பெற்ற எஸ்.ஜே.சூர்யா இப்போது ‘இசை’ படத்தின் மூலம்  இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்து இயக்கி இசையமைக்கும் படம் தான் ’இசை’. இரண்டு  இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதையும் கூட. எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் இருவரும் இசையமைப்பாளர்களாக நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் சாவித்ரி நடித்துள்ளார்.

இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் விஜய், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்த்தன், கார்த்திக் சுப்புராஜ் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
விழாவில் பேசிய விஜய், “எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லிக்கேட்க வேண்டும். அப்படி அசத்துவார். நம்மை அப்படியே வசியம் செய்துவிடுவார். ’நண்பன்’ சமயம் ’இசை’ படத்தின் கதையை என்னிடம் சொன்னார். நன்றாக இருந்தது. சொல்லப்போனால் அவர் எப்போதோ இசையமைப்பாளராக ஆகியிருக்க வேண்டும்..

 அவர் தனித்தன்மையான டைரக்டர்… இசையமைப்பாளராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்று மனம் திறந்து பாராட்டினார்.

Comments