கோவாவில் ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு!!!

26th of November 2014
சென்னை:செல்லும் திரைப்பட விழாக்கள் தோறும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸின் ‘குற்றம் கடிதல்’. பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற்ற ‘குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.
 
பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைத்த அந்த வரவேற்பில் ‘குற்றம் கடிதல் ‘ படமும் ஒன்று. கடந்த வருடமும் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்துக்காக இதே நிறுவனம் இந்த அந்தஸ்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரண்டாவது வருடமாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவதில் எனக்கு மிகுந்த பெருமை. இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் சமர்ப்பணம் என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

Comments