3rd of November 2014
சென்னை:பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ் சினிமா படைப்பாளிகள் வரிசையில், எம்.ஏ.விஜயகுமார், என்ற புதுமுக இயக்குநர் ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் ஒரு படத்தை எடுத்துள்ளார். ‘பாதி உனக்கு பாதி எனக்கு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள காதல் காட்சிகளும் இல்லை, கதாநாயகன், கதாநாயகியும் இல்லை.
பெற்றொர்களுக்கு மதிப்பளிக்காத ஒரு பெண்ணின் வாழ்க்கை நிலை எவ்வாறு அமைகிறது என்பதையும், ஆள்பலம், பண பலம் இருக்கும் செல்வந்தர்களின் இறுதி காலம் எவ்வாறு அமைகிறது என்பதே படத்தின் கதை.
இப்படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஒயிட் பாக்ஸ் புரொடக்ஷன், பிரியாமினி புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
இப்படத்தில் ஆர்யன், அலெக்ஸ், ஆனந்த், சரவணன், சுவாதி, திவ்யஸ்ரீ, ரீத்து, பேபி நிகிதா, மணிமாறன், விஜய் கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
விஜய் தீபல் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.எஸ்.செல்வதாசன், எம்.ஆர்.பாலன், எச்.கணேஷ் ஆகியோர் இசையமைக்கின்றனர். முகுந்தன், பரதன் ஆகியோர் பாடல்கள் எழுத, என்.காளிதாஸ் எடிட்டிங் செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, எம்.என்.பார்த்தசாரதி இணை தயாரிப்பை மேற்கொள்ள, வி.எஸ்.பாலாஜி தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுது எம்.ஏ.விஜயகுமார் இயக்குகிறார்.
சென்னை, செஞ்சி, அரக்கோணம், திண்டிவனம், ஊட்டி போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

Comments
Post a Comment