சென்னை:கமர்ஷியல் என்ற பெயரில் ஆபாசத்துக்கு இடம் அளிக்க மாட்டேன் என்றார் இயக்குனர் எழில்.விக்ரம் பிரபு, ‘ஊதாகலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ‘வெள்ளக்கார துரை‘. இப்படத்திற்காக கொடைக்கானலில் முதலிரவு காட்சி படமாக்கப்பட்டது. இதுபற்றி எழில் கூறியது:
எனது படங்களில் கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். கமர்ஷியல் என்ற பெயரில் ஆபாசத்தை புகுத்த மாட்டேன். வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபு-ஸ்ரீதிவ்யா நடிக்கும் முதலிரவு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக ‘கொல்லுதடி கூரச்சேல தாடி‘ என்ற பாடல் படமானது.
முதலிரவு பாடல் என்றாலும் விரசமே இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய பாடலாகவே இதை உருவாக்கினேன். இதற்கு முன் நான் இயக்கிய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் இருக்காது. சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, ராஜேந்திரன், வனிதா, மதுமிதா என பலர் நடிக்கின்றனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். வைரமுத்து பாடல்களுக்கு டி.இமான் இசை அமைக்கிறார். அன்புச்செழியன் தயாரிக்கிறார்.

Comments
Post a Comment