18th of November 2014
சென்னை:நனையாத மழையே படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை RKV ஸ்டுடியோவில் நடைபெற்றது. புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சௌந்தராஜன் இசையமைத்துள்ளார். பொதுவா பிரபலங்களையோ அல்லது நடிகையை அழைத்தோ இசை தட்டை வெளியிடுவார்கள் ஆனால் பிரபலங்கள் யாரையும் அழைக்காமல் கவிஞர்கள் நிறைந்த் அரங்கமாக காட்சியளித்தது இந்த மேடை. கவிஞர் புலமைப்பித்தன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் முத்துலிங்கம் போன்ற மூத்த புலவர்கள் மேடையில் அமர்ந்திருக்க, படத்திற்கு வாழ்த்து சொல்ல புலமைப்பித்தன் பேச வந்தார்.
பேச வந்தவர் அப்படியே தமிழ் சினிமாவில் இன்று இருக்கும் புலவர்கள் என்று சொல்லும் பலரை வெளுத்து வாங்கிவிட்டார். 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த சினிமா இப்ப இல்ல, ரொம்பவே கெட்டு போயிடிச்சு… அதுவும் பாட்டெழுதுற பசங்கள பார்த்தா கோவம்தான் வருது, அஞ்சான் படத்துல வருகிற “ஏக் தோ தீன் சார்” பாடலை பற்றி பேசிய புலமைப்பித்தன், அந்த பாடலை எழுதியது யார் என்று எனக்கு தெரியாது ஆனா தற்போதைய பிரதமர் மோடிக்கு பயங்கரமான விசுவாசியாக அவர் இருப்பார் என்று நினைக்கிறேன் என்று கூற அரங்கமே கைத்தட்டலில் நிறைந்தது. தமிழில் பாட்டு எழுதுங்க, இந்தியை எதுக்கு இங்க கொண்டு வர்றீங்க என்று கூறினார்.
Comments
Post a Comment