டெல்லியில் துவங்குகிறது ஜோதிகாவின் மறுபிரவேசம்!!!

17th of November 2014
சென்னை:கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க இருக்கிறார் தானே… ஒரு இனிய செய்தி.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் டெல்லியில் துவங்குகிறது.

இந்தக்கதை ஜோதிகாவுக்கு அமைந்ததில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் நடிப்பால் அனைவரையும் அசரடித்த மஞ்சு வாரியர் நீண்ட இடைவேளைக்குப்பின் மறு பிரவேசம் நிகழ்த்தியது இந்தப்படத்தின் மூலம் தான். 
 
ஜோதிகாவிற்கும் இந்தப்படம் ரீ-எண்ட்ரியாக அமைந்திருப்பது மிகவும் எதார்த்தமான ஆனால் அதிசயமான ஒன்று. மஞ்சுவுக்கு கிடைத்த அதே பாராட்டுக்கள் இங்கே ஜோதிகாவுக்கும் குவியும் என்பதில் நமக்கென்ன சந்தேகம்? 
 
இந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஜோதிகாவின் கணவராக ரகுமான் நடிக்கிறார்.
பொதுவாக மலையாளத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும்போது, நம்மவர்கள் அதன் தன்மையை மாற்றி, அதன் சுவையையும் குறைத்துவிடுகிறார்கள்.. அதனால் மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழிலும் இயக்குகிறார் என்பது ஒரு ஆறுதலான செய்தி..

Comments