சசிகுமார் இயக்கத்தில் விஜய்!!!

3rd of November 2014
சென்னை:’கத்தி’ வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்புதேவன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய், இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அப்பா, மகன் என்று விஜய் இரட்டை வேடம் போடும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் சாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படம் முடிந்த பிறகு ’ராஜா ராணி’ இயக்குநர் அட்லி, இயக்கத்தில் நடிக்க இருக்கும் விஜய், அடுத்ததாக சசிகுமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறாராம். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக வலம் வந்த சசிகுமார், ‘ஈசன்’ படத்தின் தோல்விக்குப் பிறகு படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது பாலா இயக்கத்தில் ’தாரதப்பட்டை’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு விஜயை வைத்து படம் இயக்க சசிகுமார் முடிவு செய்துள்ளார்.

Comments