யான் படத்தின் படு தோல்வி: மீண்டும் நயன்தாரா உடன் இணையும் ஜீவா!!!

4th of November 2014
சென்னை:யான் படத்தின் படு தோல்வி காரணமாக ஜீவாவின் மார்க்கெட் கடும் சிக்கலுக்குள்ளாகி விட்டது. அவரை வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் அட்வான்ஸ் கொடுத்த மைக்கேல் ராயப்பன் உட்பட சில தயாரிப்பாளர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு பின் வாங்கிவிட்டனர். எனவே ஜீவாவின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் அடிபடுகிறது. கருணாஸை வைத்து அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தை இயக்கிய ராம்நாத் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகவிருக்கிறதாம்.

முதலில் ஈ படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரரன் படத்தில் ஜீவா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்படி நயன்தாராவுடன் இரண்டு படங்களில் நடித்த ஜீவா அவருடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.
 
இத்தனை தகவல்களையும் சொல்லும் ஜீவா தரப்பு படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும் சொல்லாமலே இருக்கிறது. கைவசம் படம் இல்லாத காரணத்தினால் தானே இந்தப் படத்தை தயாரிக்கலாமா என யோசித்து வருகிறாராம் ஜீவா.

Comments