நயன்தாராவின் ஆசை நிறைவேறியது!!!

19th of November 2014
சென்னை:ஏராளமான இளம் ரசிகர்களை கொண்டவர் நயன்தாரா இவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் ஹீரோகள் அனைவருமே ஆசைபடுகின்றனர் , நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் நயன்தாராவுக்கு கோவில் கட்ட முன்வந்தனர், ஆனால் நயன்தாராவோ அது எல்லாம் வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டார்.

தன் வாழ்கையில் எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை எல்லாம் பொருப்படுத்தாமல் தன் முழு கவனத்தையும் சினிமாவில் காட்டினார் நயன்தாரா , இவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் இனி அவர் மார்க்கெட் போய்விடும் என்று சிலர் நினைத்தனர், ஆனால் நயன்தாராவின் மார்க்கெட் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு ஷ்ட்ராங்க இருக்கு, இவர் தற்போது தனி ஒருவன் , இது நம்ம ஆளு , மாஸ் , நண்பேண்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 
நயன்தாரா மரத்தை சுற்றி டுயட் பாடுவதை விரும்பவில்லையாம் , அனுஷ்காவை போல் சரித்திரம் வாய்ந்த படத்தில்தான் நடிக்க விரும்புகிறார், அவரது ஆசையும் நிறைவேறியுள்ளது, அது எந்த படம் என்றால் நயன்தாரா கார்த்தியுடன் இணைந்து நடிக்க உள்ள காஷ்மோரா படம்தான், இப்பத்தின் ஒரு பகுதி சரித்திர கதையாக இருக்குமாம்.
 
இதுவரை மற்ற படங்களுக்கு எல்லாம் கால்ஷீட்டை 5 நாட்கள் 10 நாட்கள் என பிச்சு பிச்சு கொடுத்த நயன்தாரா, இப்படம் சரித்திரம் வாய்ந்த படம் என்பதால் மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டாராம் , ஒரே நேரத்தில் வெவ்வேறுப்படங்களில் நடித்து கொண்டிருந்தால் சரித்திரம் வாய்ந்த படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது என்பதால் மொத்தமா கால்ஷீட் கொடுத்துவிட்டாராம் .

Comments