ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் - எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதில் அமீர் கான்!!!

23rd of November 2014
சென்னை:லிங்கா வெளியாகும் சந்தோஷத்தை துடைத்துவிட்டது அமீர் கானின் ஸ்டேட்மெண்ட். ஷங்கரின் அடுத்தப் படமான எந்திரன் 2 -இல் ரஜினிக்கு பதில் அமீர் கான் நடிக்கிறார்.

எந்திரனின் இரண்டாம் பாகத்தை ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன் என்று ஷங்கர் ஏற்கனவே கூறியிருந்தார். அதிபயங்கர சண்டைக் காட்சிகள் உள்ள படத்தில் ரஜினியை எப்படி நடிக்க வைப்பது என்ற சந்தேகம் தொடக்கம் முதலே இருந்து வந்தது.  
ரஜினி இல்லை என்றால் அவரது இடத்தை நிரப்பப் போவது யார்? விஜய்யா இல்லை அஜீத்தா என்ற மங்காத்தா சில தினங்கள் ஓடியது. எந்திரன் 2 -க்கு போடுகிற தீனிக்கு விஜய்யோ, அஜீத்தோ உத்தரவாதம் தர முடியாது. ரஜினி மாதிரி பெரிய திமிங்கலம்தான் வேண்டும்.

இறுதியில் அமீர் கானை டிக் செய்திருக்கிறார் ஷங்கர். இந்தி என்றால் இந்திய திரையங்குகளில் மட்டும் அனாயாசமாக 300 கோடியை வசூலித்துவிடலாம். அதனால்தான் அமீர் கான். பிரமாண்டம் மேலும் பிரமாண்டம் என்று போய்க்கொண்டிருக்கும் அமீர் கானுக்கு ஷங்கர் சரியான சாய்ஸ்.
 
அடிச்சு தூள் கிளப்புங்க.

Comments