30th of November 2014
சென்னை:கேரள, வனத்துறையினர், இரு வருடங்களுக்கு முன்பு யானை தந்தங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்ததாக நடிகர் மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்தி 13 ஜோடி யானை தந்தங்களையும் கைப்பற்றினார்கள். இது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மோகன்லால் இதற்கு பதில் அளிக்கும் போது வீட்டில் இருந்த யானை தந்தங்கள், எனது நண்பர்களால் பரிசாக வழங்கப்பட்டவை என்றார்.
இந்த நிலையில் மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானை தந்தங்களை பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்த்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த அமைப்பின் செயலாளர் பி.கே. வெங்கடாசலம் கூறியதாவது:–
மோகன்லால் 13 ஜோடி யானை தந்தங்களை பதுக்கி வைத்து இருந்தார். கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வனத்துறையினர் இவற்றை கைப்பற்றினார்கள். யானை தந்தங்கள் வைத்துக் கொள்வதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான லைசென்ஸ் அவர் வாங்க வில்லை.
இந்த வழக்கில் மோகன்லால் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இது சம்பந்தமாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. எனவே அவருக்கு உயரிய பத்மபூஷன் விருதை கொடுக்ககூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment