19th of November 2014
சென்னை:வாழ்வில் வெற்றி பெற மனதில் உறுதி வேண்டும்.. ஆம்.. இன்று தமிழ்திரையுலகில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கும் சினக்களைவாணர் என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் நம் விவேக் நடித்த முதல் படத்தின் தலைப்பு கூட ‘மனதில் உறுதி வேண்டும்’ என்பதுதான்.
இயக்குனர் சிகரத்தின் மோதிரக்கரத்தால் குட்டுப்பட்ட விவேக் கடந்த 25 வருடங்களில் இன்று திரையில் ஜொலிக்கும் அத்தனை நாயகர்களுடனும் நாயகிகளுடனும் இணைந்து நடித்துவிட்டார். ஒரே ஒருத்தரை தவிர.. அவர் நம் உலக நாயகன் கமல் தான்.. ஆனால் கூடிய விரைவில் அந்த மனக்குறையும் தீரும் என நம்புவோம்..
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் தன்னால் இந்த சமுதாயத்திற்கு பலனளிக்கும் வகையில் ஏதாவது நல்ல விஷயங்களை செய்து வருபவர் நமது ‘சின்னக்கலைவாணர்’ விவேக். இரண்டாவது பசுமைப் புரட்சி தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று விரும்பிய விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆசிகளோடும் வழி காட்டுதலோடும் தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு, பசுமை நம் மண்ணைவிட்டு போகாமல் இயற்கையை பாதுக்காக தன்னால் ஆன முயற்சியை செய்து வருகிறார்.
இன்று தனது 54வது பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கும் இன்னொரு மார்க்கண்டேயனாகிய இந்த சின்னக்கலைவாணருக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment