காக்கிச்சட்டை என்று மாறியது டாணா!!!

2nd of November 2014
சென்னை:துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த படத்துக்கு முதலில் டாணா என்று டைட்டில் வைக்கப்பட்டது.
 
பின் காக்கிச்சட்டை என்று வைக்கப்பட்டதாக ஒரு செய்தி அடிப்பட்டது ஆனால் டாணாவா ,காகிச்சட்டையா என்பதை அதிகாரபுர்வமாக அறிவிக்காமல் இருந்தனர்.

1985 ஆம் ஆண்டு சத்யா மூவீஸ் தயாரிப்பில் கமல் நடிப்பில் காக்கிச்சட்டை என்ற தலைப்பில் படம் வெளியானது அதனால் தற்போது அப்படத்தை தயாரித்த சத்யா மூவீஸ் நிறுவனத்திடம் அனுமதி பெற்று தற்போது செந்தில் குமார் இயக்கத்தில் நடித்திருக்கும் படத்துக்கு காக்கிச்சட்டை என்ற டைட்டிலை அறிவிக்க உள்ளனர் .
 
இப்படத்துக்கு காகிச்சடை என்று டைட்டில் பெற கமல் உதவினாராம் அதனால் சிவகார்த்திகேயன் தன் டிவிட்டர் பக்கத்தில் காக்கிச்சட்டை என்ற டைட்டலை பயன்படுத்திக்கொள்ளா அனுமதி கொடுத்ததுக்கு கமல் சாருக்கும் ,சத்யா மூவீஸ் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன் .

Comments