ஷங்கர் ஐ என்று பெயர் வைக்க என்ன காரணம் தெரியுமா?!!!

3rd of November 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது ஐ. ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஐ என்ற பெயரை ஷங்கர் தேர்வு செய்ய என்ன காரணம்?
 
ஐ எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றிய வீடியோவை சமீபத்தில் ஷங்கர் வெளியிட்டார். அதில் ஐ என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.

இப்படத்திற்கு ஏற்ற தலைப்பு அழகன் அல்லது ஆணழகன். ஆனால் இந்த இரண்டு தலைப்பில் ஏற்கனவே படங்கள் வெளியாகிவிட்டது. எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு எழுத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று ஆசை.

அதேபோல் ஐ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு. ஐ-க்கு தமிழில் என்ன அர்த்தம் என்று தேடினோம். அப்போது ஐ என்றால் அழகு என்று ஒரு அர்த்தம் இருந்தது. உடனே இதுதான் சரியான தலைப்பு என்று வைத்தேன். இவ்வாறு அதில்
அவர் கூறியுள்ளார்.

Comments