தூய்மை இந்தியா திட்டம்: தனது பிறந்த நாளில் தொடங்கினார் கமல்ஹாசன்!!!

7th of November 2014
சென்னை:காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா எனும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
மேலும் இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்குமாறு கமல்ஹாசன் உள்பட 9 பிரபலங்களுக்கு அப்போது அவர் அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை ஏற்ற கமல்ஹாசன் தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கப் போவதாக தெரிவித்திருந்தார்.
 
அதன்படி இன்று நடிகர் கமலஹாசன் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அறிவித்தபடியே தனது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை, ராஜகீழ்ப்பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
கூடவே, அவரது ரசிகர்களும் ஏரியை தூய்மைப் படுத்தும் பணியில் பங்கேற்றனர். மேலும் இதேபோல் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள ஏரிகளையும் ரசிகர்கள் தூய்மைப் படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். அதோடு இந்தப் திட்டத்தில் ரசிகர்களும், பொதுமக்களும் இணைய வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்தார்.

Comments