விவேக் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்; அஜீத் ஐடியாவாம்!!!

14th of November 2014
சென்னை:கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் விவேக் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அஜீத்தின் 55வது படமாக தயாராகி வருகிறது என்னை அறிந்தால்.
கௌதம்மேனன் இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் அஜீத் மூன்று வித கெட்டப்புகளில் நடித்து வருகிறார். அதில் ஓன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்.
  
இந்நிலையில், இப்படத்தில் விவேக்கும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளாராம். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார் விவேக்.
மேலும், இவ்வாறு என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தும், தானும் ஒரே கெட்டப்பில் தோன்றுவது அஜீத்தின் ஐடியா தான் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு மேல் படம் குறித்தும், தனது கெட்டப் குறித்தும் தன்னால் எதுவும் கூற இயலாது எனவும் விவேக் கூறியுள்ளார்.
ஏற்கனவே, கௌதம்மேனன் இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் விவேக், காமெடியில் கலக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments