சரத்குமார் எச்சரிக்கை.. பதிலடி தந்த விஷால்!!!

20th of November 2014
சென்னை:நடிகர்சங்க பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே போகிறது. தீபாவளி சமயத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர் உதவி விழங்கும் விழாவில் நாசர் பற்றி அநாகரிகமாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார் விஷால்..

நேற்று திருச்சியில் நடந்த சரத்குமாரின் கட்சிகூட்டத்தில், விஷாலின் நடவடிக்கை பற்றி சரத்குமாரிடம் கேட்டபோது, “விஷால் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என தெரியவில்லை. தொடர்ந்து இதுபோன்று நடிகர்சங்கத்தைப்பற்றி அவதூறு பேசிவந்தால் அவர் நடிகர்சங்ககத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்” என எச்சரிக்கை விடுத்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று விஷால் வெளியிட்ட அறிக்கையில், “நான் அவதூறு பேசியதாக ஆதாரம் இருந்தால் தாராளமாக சரத்குமார் என்னை வெளியேற்றலாம். குமரிமுத்து அவதூறாக பேசினார் என்றுதானே அவரை சங்கத்தில் இருந்து நீக்கினீர்கள்..?

அப்படியானால் நாசரின் மீது அவதூறாக பேசிய ராதாரவியையும் கே.என்.காளையையும் முதலில் சங்கத்தில் இருந்து வெளியேற்றுங்கள்..” என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பிரச்சனை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது தெளிவாக தெரிகிறது

Comments