18th of November 2014
சென்னை:நயன்தாராவுக்கு இன்று 29–வது வயது. தனது பிறந்த நாளை அவர் மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி இரு தினங்களுக்கு முன்பே மாலத்தீவு சென்று விட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளும் உடன் சென்று இருந்தனர். இன்று காலை விசேஷ கேக் கொண்டு வரப்பட்டது. ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். தோழிகள் பரிசு பொருட்கள் வழங்கினார்கள். இன்று இரவு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நயன்தாரா தமிழ் திரையுலகில் தொடர்ந்து ‘‘நம்பர் ஒன்’’ கதாநாயகியாக இருக்கிறார். தற்போது சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’, உதயநிதியுடன் ‘நண்பேன்டா’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, சூர்யாவுடன் ‘மாஸ்’ படங்களில் நடித்து வருகிறார். மலையாள படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்...

2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை பலவருஷமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. ஆம்.. முப்பது முடிந்து 31ல் அடியெடுத்து வைக்கிறார்.
மலையாளத்தில் இருந்து வந்தாலும் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இன்றும் முன்னணி ஹீரோயின் இவர்தான். ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக இப்போதும் அவர் நடிக்கும் படங்கள் வசூலை வாரிக்குவிக்கின்றன.
இடையில் இரண்டுமுறை இவரது வாழ்க்கையில் காதல் சூறாவளி சுழன்று அடிக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி, அதிலிருந்து வெளியேறி இப்போது புடம்போட்ட தங்கமாக மின்னுகிறார் நயன்தாரா.. மீண்டும் சூர்யா, சிம்பு என தனது புது இன்னிங்ஸில் ரவுண்டுகட்டி அடிக்கிறார் நயன்.
தமிழ்சினிமாவில் நயன்தாரா மேற்கொள்ள வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது. அவரது வெற்றிப்பயணம் இனிதே தொடர, இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment