14th of November 2014
சென்னை:ஆப்பிரிக்க நாடான கென்யாவில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி கைது செய்யப்பட்டார்.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி (வயது 42). இவர், தமிழில் 1991-ம் ஆண்டு, ஷோபா சந்திரசேகர் இயக்கிய ‘நண்பர்கள்’ படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.
இவர் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். கடந்த 1993-ம் ஆண்டு, ஆங்கில சினிமா பத்திரிகை ஒன்றில் அரை நிர்வாண ‘போஸ்’ கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் இந்தியில் மிகவும் கவர்ச்சியாக துணிச்சலுடன் நடித்த ஆஷிக் அவாரா, சாப்சே படா கிலாடி, கரண் அர்ஜூன் படங்கள் பேசப்பட்டன. கடைசியாக 2001-ம் ஆண்டு தேவ் ஆனந்தின் ‘சென்சார்’ படத்தில் நடித்தார்.
இவர் துபாயில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் விக்கி கோசுவாமியை சிறையில் சந்தித்தார். அப்போது அவர்கள் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர் நன்னடத்தை காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு, விக்கி கோசுவாமி கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மம்தா குல்கர்னியும், விக்கி கோசுவாமியும் திருமணம் செய்து கொண்டு, ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நைரோபியில் விக்கி கோசுவாமியும், மம்தா குர்கர்னியும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினர். அவர்களை கென்யா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது நிரூபிக்கப்படும்பட்சத்தில், மம்தா குல்கர்னி இந்தியாவுக்கும், விக்கி கோசுவாமி அமெரிக்காவுக்கும் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Comments
Post a Comment