கதை திருட்டை தடுக்க புதிய இயக்குனர் சங்கத்தில் முடிவு!!!


4th of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் சமிபகாலமாக அதிகரித்து கொண்டு இருக்கும் பிரச்னை கதை திருட்டு சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் இருந்து வளர்ந்து வரும் இயக்குனர்களின் படங்கள் வரை இந்த பிரச்சனை உருவாகிறது.
 
தீபாவளியன்று வெளியாகி இருக்கும் விஜயின் கத்தி படத்துக்கு கூட இந்த பிரச்னை வந்தது ஆனால் இந்த பிரச்சனையெல்லாம் கடந்து தற்போது வசூல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கபட்டுயிருக்கிறது.
 
அது என்னவென்றால் படத்தின் தலைப்பை பதிவு செய்வது போல் அப்படத்தின் கதையையும் பதிவு செய்து கொள்ளாலாம்.
 
மேலும் இதற்க்கு கட்டணம் எதுவும் கிடையாது என்று அறிவித்திருக்கிறார்கள் இதன் மூலம் கதை திருட்டை தடுக்க முடியும் என்கிறார்கள்.

Comments