ஹன்சிகாவை தொடர்ந்து தற்போது ஸ்ரேயா சரண்!!!

10th of November 2014
சென்னை:நடிகை ஹன்சிகாவுக்கு ஓவியம் என்பது கைவந்த கலை இவர் வரைந்து வைத்திருக்கும் சில ஓவிய படங்களை சில மாதங்களுக்கு முன் கண்காட்சியில் வைத்தார், அதில் ஒரு ஓவியம் பெரும் தொகைக்கு விற்பனையானது, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
 
இதில் திரட்டப்படும் நிதியை கொண்டு முதியோர் இல்லம் கட்ட உள்ளார், தற்போது மிண்டும் ஒரு கண்காட்சி நடத்த உள்ளார் , நடிகைகளில் ஹன்சிகா மட்டும்தான் இப்படி என்று நினைத்தோம் ஆனால் இவரை போல் இன்னொரு நடிகையும் உண்டு அந்த நடிகை சில ஆண்டுகளுக்கும் முன் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர் வேறுயாரும் இல்லை ஸ்ரேயாதான் , சமிபத்தில் ஆந்தரா மக்கள் ஹூட் ஹூட் புயலால் பாதிக்கப்பட்டனர்.

பதிக்கப்பட்ட மக்களுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் நிதியுதவி வழங்கினர் தற்போது ஸ்ரேயா தான் வரைந்து வரும் ஓவியங்களை ஏலத்துக்கு விட்டு அதில் வரும் நிதியை ஹூட் ஹூட் புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க உள்ளாராம்.
 
இவர்கள் நல்ல நடிகையாக மட்டுமில்லாமல் நல்ல மனசு உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.

Comments