சத்யராஜ் வைத்த கோரிக்கை.. நிராகரித்த வினியோகஸ்தர்!!!

12th of November 2014
சென்னை:சத்யராஜ் தயாரித்துள்ள ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை பார்த்த காஸ்மோ வில்லேஜ் என்கிற நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டு அவர்களின் நம்பிக்கை மற்றும் பெருந்தன்மை பற்றி பேசினார் சத்யராஜ்…
 
என்னிடம் பணத்திற்கு குறைவில்லை.. அதனால் ஈஸியாக படம் எடுத்துவிட முடியும்.. எடுத்தும் விட்டேன். ஆனால் ரிலீஸ் பண்ணுவதுதானே கஷ்டம்.. ஏன்னா சிபிராஜுக்கென்று தமிழ்சினிமாவில் பெரிய பிசினஸ் மார்க்கெட் இல்லை.. இந்தப்படத்தின் டைரக்டர் சக்திக்கும் பெரிய டைரக்டர் வேல்யூ இல்லை..

ஆனால் இந்தபடத்தை பார்த்த காஸ்மோ வில்லேஜ் நிறுவனம் எங்கள் படத்தில் இருக்கும் ஜனரஞ்சகமான கதைக்காகவும் அதை படமாக்கிய விதத்திற்காகவும் படம் பார்த்த உடனே வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் அவர்களிடம் எப்படியாவது ஒரு நூறு தியேட்டர்களிலாவது ரிலீஸ் பண்ணிவிடுங்கள் என்று கேட்டோம்..
 
ஆனால் அவர்களோ எங்கள் கோரிக்கையை மறுத்து, அதற்கு பதிலாக, இந்தப்படத்தின் மீது நம்பிக்கை வைத்து 25௦ தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். படத்தின் வெற்றி உறுதி என்பதற்கு இது ஒன்றே போதும்” என படத்திற்கு கிடைத்திருக்கும் பூஸ்ட் அப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

Comments