26th of November 2014
சென்னை:பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைகின்றனர்.
இப்படத்தை ஆர்யாவின் சொந்த பட நிறுவனமான ‘தி ஷோ பீபல்’ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. காதல், நகைச்சுவை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் தடவையாகும். இயக்குனர் ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இப்படத்தில் முக்தா பானு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யு லேகா, உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு இமான் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.
பெயரிடாமல் தொடங்கிய இப்படத்திற்கு தற்போது விஎஸ்ஓபி என்று பெயர் வைத்துள்ளனர். விஎஸ்ஓபி என்றால் ‘விசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க’ என்ற ஆங்கில முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு முன் ராஜேஷின் படங்களான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை ஓகே ஓகே என்றும் ‘சிவா மனசுல சக்தி’ படத்தை எஸ் எம் எஸ் என்றும் அழைத்தனர். இவ்விரு படங்கள் வெற்றியை போலவே இப்படமும் வெற்றியாக அமையும் என்ற நோக்கில் இப்பெயரை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment