18th of November 2014
சென்னை:பொதுவா நல்ல படம் எடுக்குற இயக்குநர்களுக்கு தனக்குள் ஒரு கர்வம் இருந்து கொண்டுதான் இருக்கிறது, இதில் இயக்குநர் பாலா தான் முதல் இடத்தில் இருப்பார் போல, இவரின் பேச்சால் பல பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்திற்கெல்லாம் ஆளாகியிருக்கிறார்கள். பாலா தயாரித்திருக்கும் பிசாசு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது, இப்படத்தை இயக்கியிருப்பது இயக்குநர் மிஷ்கின். படத்தில் புதுமுகங்கள் நடித்திருந்தாலும் படத்தின் டீசரை பார்க்கும்போது மனதில் நம்பிக்கை ஏற்படுகிறது.
படத்தை பற்றிய அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டார்கள். இறுதியாக பேச வந்த இயக்குநர் பாலா, படத்தை பற்றி பேச ஆரம்பிக்கும் முன்பே பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கிவிட்டார். இப்பெல்லாம் தமிழ் சினிமாவுல பேய் பிடிச்சு ஆட்டிட்டு இருக்கு நீங்களும் ஏன் இந்த பேய் கதையையே எடுக்க முடிவு பண்ணிங்க, கதை நல்லா இருந்தா எடுக்குறதுல தப்பில்லையே என்று பதிலளித்தார் பாலா. பத்திரிக்கையாளர்கள் கிட்டத்தட்ட 20 கேள்விக்கு மேல் கேட்டிருப்பார்கள், அவை அனைத்திற்கும் பொருமையாக பதிலளித்துக் கொண்டிருந்த பாலாவை பாராட்டியாக வேண்டும்.
மிஷ்கின் பேசும்போது, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ரிலீஸ் செய்து நான் பெரும் கஷ்டத்தில் இருந்தேன், அப்போதுதான் பாலா என்னை அழைத்து என்னடா பண்ணப்போறன்னு கேட்டார், தெரியலன்னு சொன்னேன், சரி கதை ரெடி பண்ணு, நான் படத்தை தயாரிக்கிறேன்னு சொன்னார். அடுத்த இரண்டாவது நாளில் கதையை கூறச் சென்றேன். கதை ரெடியா சரி படத்தை ஆரம்பிச்சிடு என்று சொன்னதை என்னால் நம்பவே முடியல. என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இன்று நான் என்றுமே கடமைபட்டிருக்கிறேன் என்று மிஷ்கின் கூறினார்.
மேலும் படத்தின் நடித்த நடிகர்களை பற்றி பேசும்போது இந்த படத்துல நடிக்கிறது கிட்டத்தட்ட 100 பேரிடம் ஆடிஷன் நடத்தியிருப்போம் அதில் பிரயாகா தான் எனக்கு பொருத்தமான நடிகையாக காணப்பட்டார். இந்த படத்துக்காக இவர் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவர் படம் முழுக்க அந்தரத்தில் தொங்கவிட்டு கஷ்டப்படுத்திட்டோம். அந்தரத்தில் இவர் பறந்து வருவதுபோல் காட்சி எடுத்தால் கண்டிப்பாக ஏதாவது சுவரில் மோதி காயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் காட்சிக்கு உயிர் கொடுக்க அனைத்தையும் பொருத்துக் கொண்டார். இவர் காயப்படுவதை தூரத்தில் நின்று அவரது பெற்றோர்கள் பார்த்து அழுது கொண்டிருப்பார்கள், ஆனா நான் அவங்கள பார்க்க மாட்டேன். எனக்கு காட்சி சரியா வரனும்னு அவங்க பக்கம் திரும்பாம இருப்பேன். அவங்கள பார்த்தால் எனக்கு கஷ்டமா இருக்கும் அது ஷூட்டிங்கை பாதிக்க வைக்கும் என்று தான் நான் அப்படியிருப்பேன் என்று மிஷ்கின் கூறினார்.
Comments
Post a Comment