14th of November 2014
சென்னை:காதலிப்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார் திரிஷா.நடிகர் ராணா-திரிஷா காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். ரகசியமாக தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள். இவர்களுக்குள் திடீர் காதல் முறிவு ஏற்பட்டது.
வேறு நடிகைகளுடன் ராணா தொடர்பு வைத்திருப்பதால் அவரை திரிஷா பிரிந்ததாக கூறப்படுகிறது. கன்னட நடிகை ராகினி திவேதிதான் இதற்கு காரணம் என்று சிலர் குறிப்பிட்டனர். அதை ராகினி மறுத்தார். ராணாவும் மறுத்தார். சமாதானம் அடையாத திரிஷா காதல் முறிவினால் ஏற்பட்ட விரக்தியை இணைய தள பக்கத்தில் ஜாடைமாடையாக வெளிப்படுத்தி வருகிறார்.
‘நான் கட் செய்கிறேன் என்றால் அதற்கு காரணம் கத்தரியை நீ என் கையில் எடுக்கும்வாய்ப்பை கொடுத்ததால்தான்' என மெசேஜ் போட்டவர் சில நாள் இடை வெளியில், ‘காதல் ரிஸ்க் ஆனது. அது நிறைவேறினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை, நிறைவேறாவிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து அவர் பதிவு செய்திருக்கும் புதிய மெசேஜில்,‘உண்மையாக ஒரு காதல் இல்லாதபோது அது நேரத்தை வீணடிப்பது ஆகும். வாழ்க்கையில் எவ்வளவோ நல்லது கெட்டதான விஷயங்கள் இருக்கின்றன. அதில் காதல் என்பது இடம்பெறாது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment