ஹிர்த்திக் ரோஷன் - சூசன் தம்பதியினருக்கு விவாகரத்து!!!

2nd of November 2014
சென்னை:இந்தி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சூசனுக்கு மும்பை குடும்ப நல கோர்ட் நேற்று(சனிக்கிழமை) விவாகரத்து வழங்கியது.
 
நடிகர் ஹிர்த்திக் ரோஷன், சூசன் ஆகிய இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹிராக்கான்(7), ஹிரிதான்(5) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ஹிர்த்திக் தம்பதிகளுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து இருத்தரப்பிலும் பிரிந்து செல்ல முடிவெடுத்து இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டு, மும்பை பந்தாரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கடந்த வருடம் மனு தாக்கல் செய்தனர்.
 
முன்னதாக ஹிர்த்திக் ரோஷனிடமிருந்து விவாகரத்து பெற ரூ.400 கோடி தொகையை ஜீவனாம்சமாக சூசன் கேட்டதாக வந்த செய்திகள் வெளியாகி இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், இந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும், தனது மனைவியை எப்போதும் நேசிப்பதாகவும், பணம் தொடர்பாக கருத்து வேறுபாடு இல்லை என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
 
சூசன் தரப்பிலும், அவர் தனது துறையில் பணிபுரிந்து, தனி மனிதராக தனது நிதி தேவைகளை தானே பூர்த்தி செய்யும் அளவில் தான் இருக்கிறார். இருவருக்கும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

Comments