அஜித், விக்ரம் படங்களுக்கு நிகராக படத்தை ரிலீஸ் செய்ய விஷால் முடிவு!!!

28th of November 2014
சென்னை:சுந்தர்.சி இயக்கும் படங்களில் மினி நடிகர் சங்கமே நடிக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை. இதற்கு அவர் தற்போது இயக்கி வரும் ஆம்பள படமும் விதிவிலக்கில்லை.

விஷால், கதாநாயகனாக நடிக்கும் ஆம்பள படத்தில் சந்தானம், ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா, வைபவ், சதீஷ், ரம்யா கிருஷ்ணன், கிரண் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
 
பொங்கல் அன்று படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் படப்பிடிப்பு நடைபெறும் ஊட்டிக்கே எடிட் சூட்டை கொண்டு சென்றுவிட்டனர். பகலில் படப்பிடிப்பும் இரவில் எடிட்டிங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறதாம்.

ஆம்பள படத்தை பொங்கலுக்கு வெளியிட ஏற்கனவே திட்டமிட்டுவிட்ட நிலையில், தற்போது அஜித் நடிக்கும் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் வெளியானால் கண்டிப்பாக தன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்பதை உணர்ந்த விஷால் தியேட்டர்களை புக் பண்ணும் வேலையை முடுக்கிவிட்டுள்ளாராம்.

அதுமட்டுமல்ல, வழக்கமாக தியேட்டர்களுக்குக் கொடுக்கும் பர்சன்டேஜைவிட கூடுதலாக தருவதாகவும் சொல்லி வருகிறார்களாம். இதன் மூலம் அஜித், விக்ரம் படங்களுக்கு நிகராக அல்லது அதிகமாக தன் படத்தின் ரிலீஸ் செய்ய முடியும் என்று நம்புகிறாராம் விஷால்.

இதற்கிடையில், ஆம்பள படத்தில் ஹன்சிகா போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. போலீஸ் உடையுடன் இருக்கும் ஹன்சிகாவுடன், தான் எடுத்த செல்ஃபி போட்டோ ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் சிரிப்பு நடிகர் சதீஷ்.
 
ஆம்பள ஷூட்டிங் ஸ்பாட்டில் பொம்பள போலீஸுடன் என்ற வாசகங்களுடன் அந்த புகைப்படத்தை சதீஷ் வெளியிட்டிருப்பதால் ஹன்சிகா இப்படத்தில் போலீஸாக நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.

Comments