சென்னை:நடிகை திரிஷா விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும்,
அவருக்கும் தொழிலதிபரும் திரைபப்ட தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும்
ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து
ஊடகங்கள் அனைத்திலும் இந்த செய்தி வெளியானது.
ஆனால், இதை திரிஷா
மறுத்தார். இருப்பினும், திரிஷாவும் வருண் மணியனும் கட்டிபிடித்துக் கொண்டு
இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திரிஷா திருமணத்திற்கு தயாராகி வருவதால், தனது புதுப்பட வாய்ப்புகளை இழந்துள்ளார்.
ஜெய்யுக்கு
ஜோடியாக மணிமாறன் இயக்கத்தில் திரிஷா நாயகியாக ஒப்பந்தம்
செய்யப்பட்டிருந்தார். தற்போது திருமணம் செய்தி வெளியான பிறகு, அப்படத்தில்
இருந்து திரிஷாவை நீக்கிவிட்டு, வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Comments
Post a Comment