6th of November 2014
சென்னை:இந்தவருடம் விஷ்ணுவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். காரணம் நீண்ட நாட்கள் கழித்து ‘முண்டாசுப்பட்டி’யின் மூலம் மீண்டும் சினிமா வெளிச்ச வட்டத்திற்குள் வந்திருக்கிறார் விஷ்ணு.. தொடர்ந்து வெளியாகிய சுசீந்திரனின் ‘ஜீவா’வும் விஷ்ணுவுக்கு மரியாதையான வெற்றியையே தந்தது.

தற்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்துவரும் விஷ்ணு அடுத்ததாக சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ நாயகியான மியா ஜார்ஜ் நடிக்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப்படத்தை ரவி என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்-27ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. சிவி.குமார் தொடர்ந்து தயாரிப்பதாக அறிவித்த மூன்று படங்களில் முதலில் துவங்கப்பட்டுள்ள படம் இது தான்.
Comments
Post a Comment