விஜய் நயன்தாரா அட்லி இயக்கத்தில்!!!

5th of November 2014
சென்னை:விஜய் கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அப்படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆக்ஷன் பிளஸ் ரொமாண்டிக் கதையில் உருவாக உள்ளதாம்.
இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்களாம்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஜி.வி .பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்தின் படபிடிப்பு இம்மாதம்  10ஆம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments