7th of November 2014
சென்னை:தமிழ்சினிமாவை இருநூறு கோடி ரூபாய் வியாபாரத்துக்கு எடுத்துச்சென்ற தமிழ்சினிமாவின் முதல்வன்.. உலகநாயகன் கமல்.
தொடர்ந்து நான் ஸ்டாப் ஹிட்டுகளாக கொடுத்து அடுத்ததாக ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து தர காத்திருக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு.
புதுப்புது ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டிருந்தாலும் தனது திறமையால் தன்னம்பிக்கைக்கு உதாராணமாக தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டிப்பறக்கும் அனுஷ்கா.
அழகி படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மலரும் காதல் நினைவுகளை தட்டி எழுப்பிய நடிப்புத் தாரகை நந்திதாதாஸ்.
இந்தி உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் தனது வசீகரக்குரலால் ரசிகர்களை தாளம்போட வைத்த, கிட்டத்தட்ட 2000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ்.
ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர், அரவான் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கும் பின்னணி பாடகர் கார்த்திக்…
இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சாதனை படைத்த ஜாம்பவான்கள் தான். இந்த ஆறு பேருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் அமைந்திருப்பது உண்மையிலேயே திரையுலக அதிசயம் தான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவர்கள் அனைவருக்கும் Poonththalir-Kollywood தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment